AAI வேலைவாய்ப்பு 2023 – Junior Executive பணி – ரூ.1,40,000 மாத சம்பளம்

AAI Junior Executive வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு Airports Authority of India வால் வெளியிடப்பட்டுள்ளது. Airports Authority of India நிறுவனமானது Junior Executive, Junior Assistant, Senior Assistant உள்ளிட்ட பதவிகளுக்காக மொத்தம் 342 காலி பணியிடங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு online மூலம் விண்ணப்பிக்கலாம் என AAI தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் AAIயின் வேலைவாய்ப்பு 2023ஐ குறித்து அறிய இந்த இடுகையை தொடர்ந்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

AAI Junior Executive வேலைவாய்ப்பு 2023:


விண்ணப்பதாரர்கள் AAI வேலைவாய்ப்பு குறித்து சுருக்கமாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்Airports Authority of India – AAI
பதவியின் பெயர்Junior Executive, Junior Assistant, Senior Assistant
காலியிடங்கள்342
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்05.08.2023
Onlineல் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள்04.09.2023
பணியின் வகைGovt Jobs
அதிகாரப்பூர்வ இணையதளம்www.aai.aero

AAI Junior Executive காலி பணியிடங்கள் 2023:


வ.எண்பதவியின் பெயர்பணியிடங்கள்
1Junior Assistant (Office)09
2Senior Assistant (Accounts)09
3Junior Executive (Common Cadre)237
4Junior Executive (Finance)66
5Junior Executive (Fire Services)03
6Junior Executive (Law)18
மொத்தம்342

குறிப்பு: காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, எனவே பணியிடங்களை கூட்டவோ குறைக்கவோ வாய்ப்பு உள்ளது என்பதையும் AAI நிர்வாகம் இப்படிவத்தில் குறிப்பிட்டுள்ளது.

AAI வேலைவாய்ப்பு 2023க்கான தகுதி:


AAI வேலைவாய்ப்புக் விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும், அவை எவை எனில்:

1.வயதுவரம்பு:


தாங்கள் தேர்வு செய்யும் பணியை பொறுத்து விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 04.09.2023 இன் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரம்பிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வ.எண்பதவியின் பெயர்வயதுவரம்பு
1Junior Assistant30
2Senior Assistant30
3Junior Executive27

வயது தளர்வு:

AAI நிறுவனமானது சில பிரிவினருக்கு வயது வரம்பில் பின்வருமாறு தளர்வு அளித்துள்ளது.

  • SC/ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
  • ஊனமுற்றோர்: 10 ஆண்டுகள்
  • விதவை / விவாகரத்தான பெண்கள்: அதிகபட்சம் 35 வயது

2.கல்வி தகுதி:


  • Junior Assistant (Office): பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும்
  • Senior Assistant (Accounts): B.com முடித்திருக்க வேண்டும் மற்றும் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • Junior Executive (Common Cadre): ஏதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • Junior Executive (Finance): B.Com மற்றும் ICWA/ CA/MBA முடித்திருக்க வேண்டும்
  • Junior Executive (Fire Services): பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • Junior Executive (Law): சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

AAI பணியிடங்கள் சம்பள விவரம்:


AAI பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் தங்களது பணியை பொறுத்து கீழ்கண்டவாறு சம்பளம் பெற தகுதி பெறுகிறார்கள்.

  • Junior Executive: ரூ. 1,40,000/-
  • Senior Assistant: ரூ. 1,11,000/-
  • Junior Assistant: ரூ. 92,000/-

தேர்வு முறை:


  • கணினி மூலமாக எழுத்து தேர்வு (CBT)
  • விண்ணப்பம் சரிபார்ப்பு, உடல் அளவீடு மற்றும் இதர சோதனை

AAI வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை:


  • AAIயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.aai.aeroவில் நுழைக
  • முகப்புப் பக்கத்தில் உள்ள “Careers” என்ற இணைப்பிற்குல் செல்லவும்
  • குறிப்பிட்ட வேலை வாய்ப்பின் “Registration Link” ஐ Click செய்யவும் (Link 05.08.2023அன்று activate செய்யப்படும்)
  • Online விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்
  • Scan செய்யப்பட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
  • தகுந்த விண்ணப்ப கட்டணமான ரூ.1000 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்

AAI வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து, AAI Junior Executive வேலை 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top