TNPSC Research Assistant 2023 – ரூ.1,33,100 மாத ஊதியம்

TNPSC Research Assistant வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 26, 2023 அன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பான விரிவான விளம்பரத்தை ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @tnpsc.gov.in இல் வெளியிட்டுள்ளது. TNPSC பல்வேறு துணை சேவைகளில் Combined Research Assistant பதவிகளுக்கான காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விவரங்களைச் சரிபார்த்து, ஜூலை 25, 2023ஆம் தேதிக்குள் onlineல் விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்துகிறது.

TNPSC Research Assistant 2023 விவரங்கள்:


தேர்வாணையம்TNPSC
பணியின் பெயர்Research Assistant
காலி பணி இடங்கள்06
அறிவிப்பு வெளியான நாள்26.06.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்26.06.2023
Onlineல் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள்25.07.2023
விண்ணப்பத்தை சரி செய்வதற்கான கால அவகாசம்31.07.2023 12.01 AM
to
02.08.2023 11.59 PM
பணியின் வகைGovernment Jobs
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnpsc.gov.in

TNPSC Research Assistant 2023 தேர்வு தேதி:


TNPSC தமிழ்நாடு நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் துணைப் பணி மற்றும் தமிழ்நாடு பொதுத் துணைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள அட்டவணையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கான தேர்வுகளை ஆணையம் நடத்துகிறது.

DepartmentPaperExam DateExam Time
Tamil Nadu Town and Country PlanningPaper I09.09.2023 FN09.30 A.M. to 12.30 P.M
Paper II09.09.2023 AN09.30 A.M. to 12.30 P.M
Evaluation and Applied Research Paper I10.09.2023 FN09.30 A.M. to 12.30 P.M

TNPSC Research Assistant தகுதி:


Combined Research Assistant தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும், அவை பின்வருமாறு:

1. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இருப்பினும், விண்ணப்பதாரர்களுக்கு கீழ்க்கண்ட குறிப்பிட்ட வகைகளின் அடிப்படையில் தங்களின் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

  • SC/ST/BC/MBC/அனைத்து பிரிவினரின் ஆதரவற்ற விதவைகள்: அதிகபட்ச வயது வரம்பு இல்லை
  • அங்கக்குறைபாடுள்ள நபர்கள்: 10 ஆண்டுகள்
  • முன்னாள் படைவீரர்கள்: அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகள்

2. கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வித்தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதை குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ TNPSC Research Assistant 2023 அறிவிப்பை காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. தமிழ் மொழியில் அறிவு:

TNPSC Research Assistant வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Research Assistant 2023 சம்பளம்:


  • Tamil Nadu Town and Country Planning Subordinate Service: Rs.36,200 – 1,33,100/-
  • Tamil Nadu General Subordinate Service: Rs.36,900 – 1,16,600/- 

TNPSC Research Assistant தேர்வு முறை:


  1. Computer மூலம் எழுத்து தேர்வு (CBT).
  2. நேர்முகத்தேர்வு.

TNPSC Research Assistantற்கு Onlineல் விண்ணப்பிக்கும் முறை:


  • TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in இல் உள்நுழைக
  • முகப்புப் பக்கத்தில் உள்ள “Apply Online” என்ற இணைப்பிற்குச் செல்லவும்
  • அடுத்த பக்கத்தில் உள்ள “Apply Now” என்ற buttonஐ கிளிக் செய்யவும்
  • “Combined Research Assistant in Various Sub-Ordinate Services Examination” என்ற பதவியின் கீழ் “Apply Now” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் பதிவு எண்  மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி login செய்யவும்
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் விவரங்களை சரியாக நிரப்பவும்
  • கையொப்பம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் ஸ்கேன் நகல்களைப் பதிவேற்றவும்
  • தேவையான ஆவணங்களின் ஸ்கேன் நகல்களைப் பதிவேற்றவும்
  • தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
  • எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்

TNPSC Research Assistant 2023 Application Link:


விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைப் பின்தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Combined Research Assistant தேர்வு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top