TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023 – 685 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது தற்போது Driver மற்றும் Conductorகான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இக்கழகம் 685 காலி பணியிடங்களை நிரப்பு உள்ளதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக இப்பணிக்கு விண்ணப்பிக்கவும். இது தொடர்பான விளம்பரம் ஒன்றை தனது வலைதளமான www.arasubus.tn.gov.inல் வெளியிட்டுள்ளது. மேலும் TNSTC வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை கீழே காணலாம்.

TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023:


விண்ணப்பிக்கும் நபர்கள் TNSTC வேலை வாய்ப்பு குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பதவியின் பெயர்Driver மற்றும் Conductor
காலியிடங்கள்685
விண்ணப்பிக்கும் முறைOnline
Online விண்ணப்பத்தின் தொடக்க நாள்18.08.2023
விண்ணப்பிக்க Onlineல் கடைசி நாள்18.09.2023
பணியின் வகைGovt Job
அதிகாரப்பூர்வ இணையதளம்www.arasubus.tn.gov.in

TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023 காலி பணியிடங்கள்:


TNSTC Driver மற்றும் Conductor சேர்த்து மொத்தமாக 685 பணி இடங்களை நிரப்ப உள்ளது. எனவே விண்ணப்பிப்பவர்கள் பதவியின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

வ.எண்.பதவி
1Driver
2Conductor
மொத்தம்685

TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023 தகுதி:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில தகுதிகளைப் பெற்று இருக்க வேண்டும், அவை பின்வருமாறு:

வயது வரம்பு:


விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2023ன் படி 24 வயது பூர்த்தி அடைந்தவராக வேண்டும். மேலும் சில பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

01.01.2023ன் படி

  • OC பிரிவினருக்கு : 39 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • SC/ST/BC/MBC/DNC பிரிவினருக்கு : 44 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • OC Ex-servicemen பிரிவினருக்கு : 49 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • Ex-servicemen SC/ST/BC/MBC/DNC பிரிவினருக்கு : 54 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:


  • பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத படிக்க மற்றும் பேச கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
  • கனரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் குறைந்த பட்சம் 18 மாதங்கள் கனரக வாகன ஓட்டி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:


  • எழுத்து தேர்வு
  • உடற்தகுதி தேர்வு
  • ஓட்டுநர் சோதனை
  • நேர்முகத் தேர்வு

தேர்வு கட்டணம்:


  • விண்ணப்பிப்போர் ரூ.1180/- +18% GSTயோடு தேர்வு கட்டணத்தை Onlineல் செலுத்தவேண்டும்.
  • SC/ST பிரிவினர் ரூ.590/- +18% GSTயோடு தேர்வு கட்டணத்தை செலுத்தவேண்டும்.

TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை:


  • TNSTCன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www Arasu.tn.gov.inல் நுழைக
  • முகப்புப் பக்கத்தில் உள்ள Menuவை click செய்து Recruitment Apply என்ற இணைப்பிற்குள் செல்லவும்.
  • அப்பக்கத்தில் Onlineல் விண்ணப்பிக்க என்ற Buttonஐ Click செய்யவும்.
  • Online விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • Scan செய்யப்பட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • தகுந்த விண்ணப்ப கட்டணமான ரூ.1180/- செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • குறிப்பிற்கு விண்ணப்பத்தை print out எடுத்துக் கொள்ளவும்.

TNSTC வேலைக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு:


விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை தொடர்ந்து, TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top