இன்றைய நடப்பு நிகழ்வுகள் – 25 ஆகஸ்ட் 2023

Today Current Affairs in Tamil: 25 ஆகஸ்ட் 2023 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை FreshersCorner  தலைப்புச்செய்திகளாக வழங்குகிறது. Banking, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த தொகுப்பின் மூலம் முக்கிய நிகழ்வுகளைத் தமிழில் அறிந்துகொள்ளலாம். மேலும் தினசரி நிகழ்வுகளை தமிழில் அறிய இந்த வலைத்தளத்தை பின்தொடரலாம்.

Today Current Affairs in Tamil – 25 ஆகஸ்ட் 2023:

தேசிய நடப்பு:


  • சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் செயல்பாடுகளைத் தொடங்கியது; அனைத்து அமைப்புகள் சரியாகவும், நடவடிக்கைகள் யாவும் அட்டவணைப்படியும் செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
  • மும்பையில் மாற்றுத்திறனாளிகளின் உடல்நலக் காப்பீடு குறித்து NHRC ஒரு நாள் திறந்தவெளி ஆலோசனையை ஏற்பாடு செய்துள்ளது
  • பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தி பாதுகாப்பான தேசத்தை உறுவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் அமித் ஷா

சர்வதேச நடப்பு:


  • சீன எல்லையில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் கவலை தெரிவித்தார்
  • நேபாளத்தில் நடந்த பயங்கர பேருந்து விபத்தில் இந்திய யாத்ரீகள் 6 பேர் உயிரிழந்தனர்
  • பிரிக்ஸ் மாநாட்டையொட்டி எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியை பிரதமர் மோடி சந்தித்தார்
  • ஜப்பானில் இருந்து அனைத்து கடல் உணவுகள் இறக்குமதியையும் சீனா உடனடியாக நிறுத்தியுள்ளது

மாநிலம்:


  • தமிழக அரசு 31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கியுள்ளது
  • ஹரியானா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் சண்டிகரில் இன்று தொடங்குகிறது

விளையாட்டு:


  • பேட்மிண்டன்: கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் BWF உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி விளையாடுகிறது
  • சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு 2023 உலக விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் பார்வையற்ற கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது
  • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான மற்றொரு துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான இடத்தை ராஜேஸ்வரி குமாரி உறுதி செய்துள்ளார்

வானிலை:


  • பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும்:


சமீப நடப்பு நிகழ்வுகள் 2023:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top