இன்றைய நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 21, 2023

Today Current Affairs in Tamil: ஜூலை 21, 2023 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை FreshersCorner  தலைப்புச்செய்திகளாக வழங்குகிறது. Banking, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த தொகுப்பின் மூலம் முக்கிய நிகழ்வுகளைத் தமிழில் அறிந்துகொள்ளலாம். மேலும் தினசரி நிகழ்வுகளை தமிழில் அறிய இந்த வலைத்தளத்தை பின்தொடரலாம்.

Today Current Affairs in Tamil – ஜூலை 21, 2023:

தேசிய நடப்பு:


  • இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி வந்தடைந்தார்.
  • G20 இன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் எதிர்காலத்தில் மொபைல் தொழிலாளர்களே யதார்த்தமாக இருக்கப் போவதாக கூறினார்.
  • மணிப்பூர் வன்முறை தொடர்பான சலசலப்பை தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு மன்றங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
  • அணுசக்தி திறன் 2031க்குள் 7000 மெகாவாட்டிலிருந்து 22,480 மெகாவாட்டிற்கு மேல் அதிகரிக்குமென மேல் சபையில் அரசு தெரிவித்தது.
  • பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை நியாயமான விலையில் கிடைக்க செய்வதற்காக ஏற்றுமதியை அரசு தடைசெய்துள்ளது.
  • EAM டாக்டர் எஸ் ஜெய்சங்கர் BRICS வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சர்வதேச நடப்பு:


  • இந்தியா, ஜப்பான் இடையே மீள்தன்மையுடைய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • காத்மாண்டுவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஆறு நபர்களை நேபாள போலீசார் கைது செய்தனர்.
  • போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெனிசுலாவின் முன்னாள் உளவு தலைவர் ஹியூகோ காரை அமெரிக்காவிடம் ஸ்பெயின் ஒப்படைத்தது.
  • அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர்
    பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
  • ‘China Plus One’ஐ பயன்படுத்தி உற்பத்தித் துறையில் வேலைகளை உருவாக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்று உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா தெரிவித்துள்ளார்.

மாநிலம்:


  • ஹரியானா அரசு, சரக்குக் கொட்டகைகளை அமைப்பதற்கு ரயில்வே அமைச்சகத்திற்கு வசதியாக, நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.

வணிகம் & பொருளாதாரம்:


  • EPFO மே 2023இல் 16.30 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது, புதிய உறுப்பினர்களில் 18 முதல் 25 வயது கொண்டோர் 56 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.
  • தங்கம் விலை ரூ.35 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.59,825 ஆகவும், வெள்ளி ரூ.50 அதிகரித்து கிலோவுக்கு ரூ.76,460 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டன.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81.99 ஆக உள்ளது.
  • உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

விளையாட்டு:


  • FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பை: தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து நார்வேயை வென்றது; ஆஸ்திரேலியா அயர்லாந்தை வீழ்த்தியது.
  • டிரினிடாட்டில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
  • கொரியா ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன ஜோடியை தோற்கடித்தது.
  • ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்: ஸ்கீட் கலப்பு அணி போட்டியில் ஹர்மேஹர் சிங் லல்லி, சஞ்சனா சூத் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

வானிலை:


  • குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • அடுத்த 2 நாட்களுக்கு கொங்கண் மண்டலம், மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.
  • அடுத்த 4-5 நாட்களுக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் குறைந்த மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்.

மேலும் படிக்க:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top