இன்றைய நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 19, 2023

Today Current Affairs in Tamil: ஜூலை 19, 2023 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை FreshersCorner  தலைப்புச்செய்திகளாக வழங்குகிறது. Banking, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த தொகுப்பின் மூலம் முக்கிய நிகழ்வுகளைத் தமிழில் அறிந்துகொள்ளலாம். மேலும் தினசரி நிகழ்வுகளை தமிழில் அறிய இந்த வலைத்தளத்தை பின்தொடரலாம்.

Today Current Affairs in Tamil – ஜூலை 19, 2023:

தேசிய நடப்பு:


  • உள்துறை அமைச்சர் சஹாரா குழுமத்தின் ‘CRCS-Sahara Refund Portal’ஐ தொடங்கிவைத்தார்.
  • தேர்தல் நேரத்தில் ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இனி வலைத்தளங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தனது 79வது வயதில் காலமானார்.
  • நாட்டில் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் உள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
  • OTT தளங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தினார்.

சர்வதேச நடப்பு:


  • கடத்திச்செல்லப்பட்ட 105 பழங்கால பொருட்களை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
  • துபாயில் நடைபெறும் உணவு மற்றும் பாணங்கள் தொடர்பான இந்தியா-GCC வாங்குவோர் விற்போர் சந்திப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதோடு புதுமையை காட்சிப்படுத்துகிறது.
  • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்க் அர்ஜென்டினாவின் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கிடையே ஆன பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து விவாதித்து வருகிறார்.
  • இந்தியா அமெரிக்கா இடையே பசுமை எரிசக்தி கூட்டு முயற்சிகள் தொடர்பான அமைச்சர்கள் அளவிலான கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.
  • வெப்ப அலை உலகின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்கிறது; மேலும் தீவிர வெப்பநிலைக்கு உலகம் தயாராக வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • வடகொரியாவில் சட்டவிரோதமாக எல்லையை தாண்டிய அமெரிக்க பிரஜை கைது: ஐ.நா.

மாநில செய்திகள்:


  • அருணாச்சல பிரதேச சுற்றுலாத்துறை செயலாளர் ஸ்வப்னில் நாயக் இட்டாநகரில் ‘யுவா டூரிசம் கிளப்’ஐ தொடங்கினார்.
  • போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு தடுப்பு முகாம்களை மகாராஷ்டிரா அரசு அமைக்கும்: துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
  • இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமையும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

விளையாட்டு:


  • கொரியா ஓபன் 2023: இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
  • இந்திய ஷட்லர் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, மணிக்கு 565 கிமீ வேகத்தில் பாட்மிண்டன் ஷாட் அடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் 2026 காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தாது என விக்டோரியா மாநில பிரீமியர் டான் ஆண்ட்ரூஸ் அறிவித்துள்ளார்.

வானிலை:


  • அடுத்த 3-5 நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது.

மேலும் படிக்க:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top