Today Current Affairs in Tamil: ஜூலை 24, 2023 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை FreshersCorner தலைப்புச்செய்திகளாக வழங்குகிறது. Banking, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த தொகுப்பின் மூலம் முக்கிய நிகழ்வுகளைத் தமிழில் அறிந்துகொள்ளலாம். மேலும் தினசரி நிகழ்வுகளை தமிழில் அறிய இந்த வலைத்தளத்தை பின்தொடரலாம்.
Today Current Affairs in Tamil – ஜூலை 24, 2023:
தேசிய நடப்பு:
- லோகமான்ய பாலகங்காதர் திலகர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
- ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகள் பாரம்பரிய மருத்துவத்தை இந்தியாவின் G20 பிரசிடென்சி சொற்பொழிவில் முன்னணிக்கு கொண்டு வந்துள்ளன – அமிதாப் காந்த்.
- ஆந்திராவில் 108 அடி உயர ஸ்ரீராமர் சிலைக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
- 5வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சி மாநாடு ஜூலை 25 கஜுராஹோ, MP யில் நடக்க உள்ளது.
- நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த விவாதத்தை ஆல் இந்தியா ரேடியோ இன்று ஒளிபரப்ப உள்ளது.
சர்வதேச நடப்பு:
- வங்கதேசம்: பேருந்து குளத்தில் கவிழ்ந்ததில் 17 பேர் இறந்தனர், 35 பேர் காயமடைந்தனர்.
- ஸ்பெயின்: நாடாளுமன்றத்தின் 350 இடங்களுக்கு ஜூலை 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
- நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸுக்கு 12 கோடி வரி செலுத்த வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கம்போடியா தேர்தல்: ஹுன் சென்னின் ஆளும் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது.
வணிகம் & பொருளாதாரம்:
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் இதுவரை இந்திய பங்குகளில் 44,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
விளையாட்டு:
- கொரியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆசிய விளையாட்டு மல்யுத்த தகுதிச்சுற்றிலிருந்து ரவி தஹியா வெளியேறினார்.
- போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்களுக்கு சுருட்டியது.
முக்கிய நாள்:
- ஜூலை 23 தேசிய ஒலிபரப்பு நாள்; இதே நாளில், 1927ஆம் ஆண்டு நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பு பம்பாய் நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டது.